டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு தேர்வாணையம் தற்போது வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு! விவரங்கள் அறிய || TNPSC Mains Exam Pattern Changed 2024

TNPSC Mains Exam Pattern Changed 2024

TNPSC Mains Exam pattern: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள இரண்டாம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வை (செப்டம்பர் 14) நடத்தியது.

TNPSC Mains Exam Pattern Changed 2024
TNPSC Mains Exam Pattern Changed 2024

இந்தத் தேர்வு மூலம் மொத்தம் 2540 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் நேர்முகத் தேர்வு அடங்கிய 534 பணியிடங்களும், நேர்முகத் தேர்வு அல்லாத 2006 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.

குரூப் 2, 2A பதவிகளுக்கு முடிவுகள்:

குரூப் 2, 2A தேர்வுக்கான முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியிடப்பட்டன. குரூப் 2 பதவிகளுக்கு முதன்மைத் தேர்வுக்கு 7,987 பேர் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். குரூப் 2A பதவிகளுக்கு, 21,822 பேர் முதன்மை தேர்வுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் முதன்மைத் தேர்வு பிப்ரவரி 2, 8 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. அதன்படி, குரூப் 2ஏ முதன்மைத் தேர்வு பிப்ரவரி 8 ஆம் தேதி காலை 9.30 முதல் 12.30 மணி வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்வு கொள்குறி வகை வினாக்கள் அடங்கிய தேர்வாக நடைபெறும்.

தமிழ் மொழி தகுதித் தேர்வு:

குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுக்கான முதல் தாளாக நடத்தப்படும் தமிழ் மொழி தகுதித் தேர்வு, பிப்ரவரி 8 மதியம் 2.30 முதல் மாலை 5.30 வரை நடைபெற உள்ளது.

அதனைத்தொடர்ந்து குரூப் 2 முதன்மைத் தேர்வுக்கான இரண்டாம் தாளான விரிந்துரைக்கும் வகையிலான தேர்வு பிப்ரவரி 23 ஆம் தேதி நடைபெற உள்ளது.

குரூப் 2, 2A முதன்மைத் தேர்வுகள்:

குரூப் 2, 2A முதன்மைத் தேர்வுகள் தமிழகம் முழுவதும் 37 மையங்களில் நடைபெற உள்ளது. மேலும், குரூப் 2ஏ முதன்மைத் தேர்வுக்கான தேர்வுமுறையும் மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக கொள்குறி வகை வினாக்கள் அடங்கிய குரூப் 2ஏ முதன்மைத் தேர்வு கணினி வழித் தேர்வாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில், குரூப் 2ஏ முதன்மைத் தேர்வு ஓ.எம்.ஆர் தாள் மூலம் நடத்தப்படும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

TNPSC Mains Exam Pattern Changed 2024
TNPSC Mains Exam Pattern Changed 2024

இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.

Whatsapp Group Join
Telegram Channel Join
Whatsapp Channel Join

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய இணையதளப் பக்க தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும். 

Official Notification: 

Official Website: 

For More Job Info: 

Leave a Comment

Join Group!
error: Content is protected !!