டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு அறிவிப்பு இன்னும் சில தினங்களில்! தேர்வர்கள் ரெடியா இருங்க – TNPSC Group 4 Notification Release In a Few Days 2023

TNPSC Group 4 Notification Release In a Few Days 2023

தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடத்ததி வருகிறது. அதிக பணியிடங்கள், ஒரே தேர்வு என்பதால், இதற்கு எப்போதுமே தேர்வர்கள் மத்தியில் எதிர்பார்ப்பும் வரவேற்பும் அதிகம் நிலவுகிறது. 

TNPSC Group 4 Notification Release In a Few Days 2023
TNPSC Group 4 Notification Release In a Few Days 2023

இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி 2023ஆம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு TNPSC Group 4 Exam 2023 எப்போது நடைபெறும், காலிப் பணியிடங்கள் எவ்வளவு என்ற அறிவிப்பு, இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

TNPSC குரூப் 4 தேர்வு:

கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான உத்தேச அட்டவணையில், நவம்பர் 2023-ல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு TNPSC Group 4 Exam Notification 2023 வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

காலி பணியிடங்களின் எண்ணிக்கை குறிப்பிடப்படாத நிலையில், 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. மே மாதம் எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் 2024 ஜூலை மாதத்தில் நேர்முகத் தேர்வின் முடிவுகள் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது. 

அதேபோல 2023ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட, புதிய உத்தேச அட்டவணை கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. இதில், நவம்பர் மாதம் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காலி பணியிடங்களின் எண்ணிக்கை குறிப்பிடப்படாத நிலையில், 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்வு நடைபெற உள்ளது. மே மாதம் எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் 2024 ஆகஸ்ட் மாதத்தில் நேர்முகத் தேர்வின் முடிவுகள் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

குரூப் 4 தேர்வு 15125 பணியிடங்கள் குறித்து அரசு வட்டாரங்கள் கூறியது:

லட்சக்கணக்கானோர் எழுதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு நவம்பரில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி ஏற்கனவே அறிவித்துள்ளது. அதன்படி, தீபாவளிக்கு முன்பாக அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிட்டத்தட்ட 15000 அதிகமான காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகலாம். இது, தேர்வர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும். கடந்த முறை 7 ஆயிரம் பணியிடங்கள் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. தேர்வு முடிந்த பிறகு 10 ஆயிரத்து 205 ஆக அதிகரிக்கப்பட்டது.

தேர்வு எழுதுபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு:

கடந்த ஆண்டு குரூப் 4 தேர்வு ஜூலை மாதம் நடந்தது. 23 லட்சம் பேர் வரை விண்ணப்பித்தனர். அதில் 18 லட்சம் பேர் வரை தேர்வு எழுதினர், இப்போது, கடந்த முறையை விட 5 ஆயிரம் இடங்கள் அதிகமாக இருக்கும் என்பதால், தேர்வு எழுதுபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

‘கட்ஆப்’ மதிப்பெண் அதிகமாக இருக்கும்:

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு  ‘கட்ஆப்’ மதிப்பெண் அதிகமாக இருக்கும் அதேநேரம், சொன்னபடி நவம்பரில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தேர்வு நடத்த வேண்டும் என்று தேர்வர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

TNPSC குரூப் 4 தேர்வு அறிவிப்பு:

அரசுப் பணி என்பதால், குரூப் 4 தேர்வுக்கு தேர்வர்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. இதற்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இதற்கிடையே 2023ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்போது நடைபெறும்? காலிப் பணியிடங்கள் எவ்வளவு? என்ற அறிவிப்பு இந்த மாதத்திலேயே இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.

Whatsapp Join
Whatsapp Channel Join
Telegram Channel Join

 

TNPSC Group 4 Notification Release In a Few Days 2023
TNPSC Group 4 Notification Release In a Few Days 2023
Official Website:

Latest Jobs:

Leave a Comment

Join Group!
error: Content is protected !!