TNPSC Group 4 Exam 2024 Important Announcement
டி.என்.பி.எஸ்.சி தற்பொழுது குரூப் 1 மற்றும் குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் மொத்தம் உள்ள 32 பணியிடங்களுக்கான குரூப்1 முதல்நிலை தேர்வானது நடப்பு ஆண்டு நவம்பர் மாதத்திலும், எழுத்து தேர்வானது அடுத்த ஆண்டு ஜூலையிலும் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு அரசுத்துறைகள் செயல்பட்டு வருகிறது. இந்த அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதில் பதவிகளுக்கு ஏற்ப குரூப் 1, குரூப் 2 என பல்வேறு குரூப்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப் 1 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதேபோன்று கிராம நிர்வாக அலுவலர் (VAO), தட்டச்சர், ஸ்டேனோ டைபிஸ்ட், இளங்கலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது.
TNPSC Group 4 தேர்வு 2023 அறிவிப்பு எப்போது:
குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வருகிற நவம்பர் மாதம் 15ஆம் தேதிக்கு பிறகும் அடுத்த ஆண்டு பிப்ரவரி இறுதி வாரத்தில் இதற்கான எழுத்து தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
TNPSC Group 4 தேர்வு முழுவிவரம்:
TNPSC Group 4 தேர்வு என்பது என்ன?
தமிழக அரசு சார்த்த பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் போட்டி தேர்வுகளில் ஒன்று TNPSC குரூப் 4 தேர்வு ஆகும்.
TNPSC குரூப் 4 பதவிகள் என்ன?
TNPSC குரூப் 4 தேர்வு மூலம், கிராம நிர்வாக அலுவலர் (VAO), டைபிஸ்ட், ஸ்டேனோ டைபிஸ்ட், ஜூனியர் உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படும்.
குரூப் 4 தேர்வுக்கான வயது வரம்பு?
குரூப் 4 தேர்வுக்கு 18 முதல் 37 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும், சில பதவிகளுக்கு வயது வரம்பு மாறுபடும். அதன்படி, கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கு 21 முதல் 32 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி, சிறப்பு பிரிவினருக்கு 40 வயது வரை தளர்வு வழங்கப்படும்.
VAO தேர்வுக்கான தகுதி என்ன?
TNPSC VAO தேர்வுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 10-வது தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 21 முதல் 32 வயதுடையவர்கள் VAO தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
குரூப் – 4 தேர்வுக்கான கல்வித்தகுதி?
TNPSC குரூப் 4 தேர்வுக்கு தகுதி பெற, விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஜூனியர் அசிஸ்டெண்ட் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு படித்தவர்களுக்கும் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
குரூப் – 4 தேர்வுமுறை என்ன?
என்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஒரே கட்ட எழுத்து தேர்வு முறை ஆகும். எழுத்துத் தேர்வில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். இது, பொது அறிவு (திறனறிவு), பொது தமிழ், திறனறிவு என 3 பிரிவுகளை கொண்டுள்ளது. ஒரு வினாவுக்கு 1.5 மதிப்பெண்கள் என்ற வீதத்தில் மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும்.
அனைத்து வினாக்களும் Objective Type-யில் கேட்கப்படும். குரூப் – 4 தேர்வின் வினாத்தாளில் இரண்டு பகுதிகளாக வினாக்கள் கேட்கப்படும். அவற்றில் 100 வினாக்கள் தமிழ் பாடப்பகுதியிலிருந்து கேட்கப்படும். மீதம் உள்ள 100 வினாக்கள் பொது அறிவு பகுதியில் இருந்து கேட்கப்படும்.
அதில், 75 பொது அறிவு வினாக்களும், 25 திறனறி தேர்வு (Aptitude Test) வினாக்களும் இருக்கும். எழுத்துத் தேர்வில் தகுதி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டு, தகுதி பெறுபவர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணியிடங்கள் வழங்கப்படும்.
குரூப் 4-க்கான பாடத்திட்டம்
TNPSC குரூப் 4 தேர்வு மூன்று பிரிவுகளை கொண்டது. அதாவது, பொது ஆய்வுகள் – திறன் மற்றும் மனத்திறன் – தமிழ் தகுதி மற்றும் மதிப்பெண் தேர்வு ஆகிய பிரிவுகளை கொண்டது. அவற்றில் 100 வினாக்கள் தமிழ் பாட பகுதியிலிருந்து கேட்கப்படும்.
குரூப் 4 -க்கு எந்த மாதிரியான புத்தகங்கள் படிக்கலாம்?
TNPSC குரூப் – IV தேர்வுக்கு தயாராக 5 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான புத்தகங்களை படித்தாலே போதுமானது. TNPSC குரூப் – 4 தேர்வின் முந்தைய ஆண்டு அசல் வினாத்தாள்களை பார்வையிடவும். பின்னர், வி.வி.கே.சுப்புராஜ் -யின் TNPSC GROUP IV தேர்வு ஆல்-இன்-ஒன் முழுமையான படிப்புப் புத்தகம் & தீர்க்கப்பட்ட வினாத்தாள். மெக்ரா ஹில் பப்ளிகேஷன்ஸ், எம்.கார்த்திகேயனின் TNPSC தேர்வுகளுக்கான கையேடு (பொது ஆய்வுகள்). எஸ். சந்த் பப்ளிகேஷன்ஸ் – ஆர்.எஸ்.அகர்வாலின் போட்டித் தேர்வுகளுக்கான அளவுத் திறன். அரிஹந்த் பப்ளிகேஷன்ஸ் – அரிஹந்த் நிபுணர்களின் பொது அறிவு 2020.
TNPSC குரூப் 4 தேர்வை தமிழில் எழுதலாமா?
TNPSC குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் இருக்கும். உங்களுக்கு விருப்பமான மொழியில் நீங்கள் எழுதலாம்.
குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பக்கட்டணம் எவ்வளவு?
TNPSC தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ஒரு முறை பதிவு கட்டணம் ரூ. 150 செலுத்த வேண்டும். ஏற்கனவே பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள் மீண்டும் பதிவு செய்யத் தேவையில்லை. இது போக, குரூப் 4 தேர்வுக்கு ரூ.100 தேர்வு கட்டணமாக செலுத்த வேண்டும்.
எவ்வளவு சம்பளம் வழங்கப்படும்?
என்பிஎஸ்சி குரூப் 4 பதவிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, ஊதியநிலை 8-யின் கீழ் ரூ. ரூ. 19,500 முதல் ரூ. 62, 000 வரை மாத சம்பளம் வழங்கப்படும். மேலும், பதவியின் அடிப்படையில் சம்பள வரம்பு மாறுபடும்.
குரூப் – 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க என்னென்ன ஆவணங்கள் தேவை?
SSLC, HSC, பட்டப்படிப்பு சான்றிதழ்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல். ஆதார் அட்டை அல்லது அரசால் வழங்கப்பட்ட ஏதாவது ஆவணம். ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படம் (அகலம்: 3.5 செ.மீ, உயரம்: 4.5 செ.மீ, 50 KB-க்கு மேல் இருக்க கூடாது). ஊனமுற்றோர் சான்றிதழ் (ஏதேனும் இருந்தால்). ஸ்கேன் செய்யப்பட்ட கையொப்பம் (அகலம்: 6 செ.மீ, உயரம்: 3 செ.மீ, 50 KB க்கு மேல் இருக்க கூடாது) . உடல் தகுதி சான்றிதழ் (தேவைப்பட்டால்).
குரூப் 4 தேர்வுக்கு எப்படி விண்ணப்பிப்பது?
முதலில், TNPSC-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான tnpscexams.in க்குச் செல்லவும். பின்னர், TNPSC ஒரு முறை பதிவு உள்நுழைவு விவரங்களை உள்ளிட்டு, உள்நுழையவும். இதையடுத்து, TNPSC குரூப் 4 விண்ணப்பப் படிவம் 2022 ஐ பூர்த்தி செய்யவும். தேவையான ஆவணங்களை இணைக்கவும். பின்பு, விண்ணப்பக் கட்டணம் செலுத்தி விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். எதிர்கால தேவைக்காக TNPSC குரூப் 4 விண்ணப்பத்தை பிரிண்ட் எடுக்கவும்.
Official Website:
Latest Jobs: