TNPSC Group 2 Result Important Announcement 2023
TNPSC Group 2 தேர்வு 5446 பணியிடங்களுக்காக நேர்முக தேர்வு மற்றும் நேர்முக தேர்வு அல்லாத பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வு, கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்றது.

அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு TNPSC குரூப் 2 முதன்மை தேர்வு கடந்த பிப்ரவரி மாதத்தில் நடத்தி முடிக்கப்பட்டது. இத்தேர்வை 55,071 ஆயிரம் தேர்வர்கள் எழுதியுள்ளனர். இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த 8 மாதங்களாக வெளியிடப்படாமல் உள்ளது.
டிஎன்பிஎஸ்சி முதன்மைத் தேர்வு முடிவுகள் Secondary Exam Result :
இந்நிலையில், TNPSC Group 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியாகாமல் இருப்பது ஏற்கத்தக்கது அல்ல என்று தேர்வர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது குறித்து விளக்கம் அளித்துள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 55 ஆயிரம் தேர்வர்களின் எழுத்து வடிவ விடைத்தாள்களையும் கணினி வழி கொண்டு திருத்தப்படுவதாக தெரிவித்துள்ளது.
அதன்படி ஒவ்வொரு தேர்வரின் விடைத்தாளையும் ஒவ்வொரு கேள்விக்கான பதிலாக கணினி மூலம் இரண்டு தேர்வு மதிப்பீடாளர்கள் மதிப்பீடு செய்து வருவதாகவும், தனித்தனியாக மதிப்பீடு செய்யும் பணி செய்ய வேண்டியுள்ளதால், அதற்கு கால அவகாசம் தேவைப் படுவதாகவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
டிசம்பர் மாதத்தில் முடிவுகள் Result Date:
குரூப் 2 தேர்வு முடிவுகள், ஏற்கனவே அறிவித்தபடி டிசம்பர் மாதத்தில் முடிவுகள் வெளியிடப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு தலைவர் இதுவரை நியமிக்கப்படாமல் உள்ளதும், உறுப்பினர்கள் முழுவதும் நியமிக்கப்படாமல் இருப்பதும் கால தாமத்தை ஏற்படுத்துவதாக கூறியுள்ளனர்.
தேர்வர்களின் கோரிக்கை:
மேலும், தற்போது விடைத்தாள் மதிப்பீட்டில் பணியில் உள்ள மதிப்பீட்டாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்பது தேர்வர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுவதால், 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை காத்திருக்கும் நிலை உள்ளதாக கூறியுள்ளனர். இதனால், மன உளைச்சல் ஏற்படுத்துவதுடன் பொருளாதார நெருக்கடிகளையும் சந்திப்பதாக தேர்வர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
அரசு வேலைக்காக தயாராகிக் கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு அனைத்து விதமான தகவல்களையும் Learners Info Website கொடுத்து உங்களை அரசு வேலையில் பணி அமர்த்த உறுதுணையாக இருக்கும். மேலும் தகவல்களுக்கு நமது Whatsapp குரூப், டெலிகிராம் குரூப், Whatsapp சேனலில் இணைந்து தினமும் அப்டேட்களை பெற்று தெரிந்து கொள்ளவும். அனைவரும் அரசு வேலையை பெற வாழ்த்துக்கள்.
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.

Latest Jobs: