TNPSC வெளியிட்டுள்ள புதிய வேலைவாய்ப்பு! TNPSC Assistant Geologist Recruitment 2023

TNPSC Assistant Geologist Recruitment 2023

 

தமிழ்நாடு ஒருங்கிணைந்த உதவி நிலவியலாளர் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. TNPSC ஆட்சேர்ப்பு 2023 தொடர்பான முக்கியமான தேதிகள், தகுதிக்கான அளவுகோல்கள், தேர்வு செயல்முறை போன்ற முழுமையான தகவலை வழங்கியுள்ளோம்.

TNPSC Assistant Geologist Recruitment 2023
TNPSC Assistant Geologist Recruitment 2023

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த உதவி நிலவியலாளர் சார்நிலைப் பணிகளில் அடங்கிய உதவி நிலவியலாளர் (Assistant Geologist) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 40 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 23.06.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

To Know More Government Jobs Details-Click Here

TNPSC Job Recruitment 2023 Details:

பணி:

உதவி நிலவியலாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை:

  • 40

காலியிட விவரம்:

உதவி நிலவியலாளர் (நீர்வளத் துறையின் நிலத்தடி நீர் பிரிவு) –11

உதவி நிலவியலாளர் (புவியியல் மற்றும் சுரங்கத் துறை) –29

கல்வித் தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Master of Science degree in Geology or Master of Science degree in applied Geology or Master of Science (Technology) in Hydrogeology.முடித்திருக்க வேண்டும்.

சம்பளம் :

  • ரூ. 37,700 – 1,19,500

வயதுத் தகுதி:

இந்தப் பணியிடங்களுக்கு 01.07.2023 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC, BC, BCM பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை.

தேர்வு முறை:

இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களாக நடைபெறும். இதில் முதல் தாளில் Geology  பாடங்களில் இருந்து வினாக்கள் இடம்பெறும். இதில் 200 வினாக்கள் 300 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். இதற்கான கால அளவு 3 மணி நேரம்.

இரண்டாம் தாள் இரண்டு பகுதிளாக நடைபெறும். முதல் பகுதி தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இதில் 100 வினாக்கள் 150 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். குறைந்தபட்சம் எடுக்க வேண்டிய மதிப்பெண்கள் 60.

இரண்டாம் தாள் பொது அறிவு. இதில் 100 வினாக்கள் 150 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். இதற்கான கால அளவு 3 மணி நேரம்.

விண்ணப்பக் கட்டணம் :

  • ரூ. 150
  • ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

தேர்வுக் கட்டணம் :

  • ரூ. 150
  • SC, SC(A), ST மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு.

விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம். நிரந்தரப்பதிவு வைத்திருப்பவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகியவற்றை ஆணையம் அறிவித்துள்ள அளவு மற்றும் பார்மட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும், தங்களது கல்வி மற்றும் பிறச் சான்றிதழ்களை கையில் வைத்துக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். உங்களது அனைத்து விவரங்களையும், சரியாக உள்ளிட்டு விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தி, சமர்ப்பிக்க வேண்டும். சமர்பிக்கப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

How to Apply TNPSC Recruitment 2023?

  • விண்ணப்பதாரர்கள் Online ல் விண்ணப்பிக்கலாம்
  • அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரங்களைக் கண்டறியவும்.
  • எந்த தவறும் இல்லாமல் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.
  • தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
  • ஆன்லைனில் பணம் செலுத்துங்கள்
  • உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்

விண்ணப்பிக்க கடைசி தேதி:

  • 23.06.2023

இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Groupஇல் பகிரப்படும்.நமது Whatsapp குழுவில் இணைய…

Whatsapp Join
TNPSC Assistant Geologist Recruitment 2023
TNPSC Assistant Geologist Recruitment 2023

TNPSC Recruitment Job Apply:

இந்த  பணிக்காண விண்ணப்பம் Online மூலம் மட்டுமே  அனுப்ப வேண்டும்.

Notification:

Apply:

Latest Jobs:

For More Job Info Join:

Whatsapp Join

Leave a Comment

Join Group!
error: Content is protected !!