TN TRB Important Announcements 2023
தமிழ்நாட்டில் உள்ள மாணாக்கர்களுக்கிடையே ஆராய்ச்சி திறனை வளர்க்கவும் புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்வதை ஊக்குவிக்கவும் மாண்புமிகு முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகைத் திட்டத்திற்கான தகுதித் தேர்வு 2023 – 2024 ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படுகின்றது.
உதவித் தொகைத் திட்டத்திற்கான தகுதித் தேர்வு:
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முழு நேர ஆராய்ச்சி படிப்பிற்காக ( Full Time Ph.D Programme ) நிதியுதவி அளிக்கும் வகையில் தமிழ்நாட்டை சார்ந்த தகுதியான மாணாக்கர்களிடமிருந்து 2023 2024 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன.
இதன் தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (https://trb.tn.gov.in/) மேற்படி அறிவிக்கை 16.10.2023 அன்று வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக 20.10.2023 முதல் 15.11.2023 பிற்பகல் 5.00 மணிவரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இத்தேர்வுக்கான அறிவிப்புகள் மற்றும் விண்ணப்பிக்கும் லிங்க் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் இத்தகவல்களைப் படித்து கவனமாக விண்ணப்பிக்கவும்.
தமிழ்நாடு தனியார் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கம், தமிழகத்தில் அரசு பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.
காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள்:
தமிழகத்தில் கொரோனா காலத்திற்குப் பிறகு அரசு நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் தற்போது வரைக்கும் நிரப்பப்படாமல் உள்ளன.
அதாவது, தமிழகத்தில் கிட்டத்தட்ட 12 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கும் நிலையில் அரசுப் பள்ளிகளில் பாடம் நடத்துவதற்கு போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர்.
மேலும், ஒரு சில ஆசிரியர்களே இரண்டிற்கும் மேற்பட்ட வகுப்புகளை ஒரே நேரத்தில் கவனித்துக் கொள்வதால் தங்களுக்கு கூடுதல் பணி சுமை ஏற்படுவதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சென்னை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க கோரி அண்மையில் வழக்கு ஒன்றை தொடர்ந்தனர்.
ஆசிரியர் பணியிடங்கள் நேரடி தேர்வு:
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் காலியாக உள்ள 499 ஆசிரியர் பணியிடங்களில் 50 சதவீதத்தை நேரடி தேர்வு மூலம் நிரப்ப வேண்டும் என்று தேர்வு வாரியத்திற்கு உத்தரவிட்டு உள்ளது. மேலும் இதை தொடர்ந்து மாநகராட்சி இன்னும் இரு வாரங்களில் தேர்வு வாரியத்திற்கு கடிதம் அனுப்ப வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளது.
தனியார் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கம்:
அதை தொடர்ந்து தமிழ்நாடு தனியார் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் “அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும், ஒரு பள்ளிக்கூடம் கட்டிடம் இல்லாமலும், கரும்பலகைகள் இல்லாமலும் கூட இயங்க முடியும்.
ஆனால், ஆசிரியர் இல்லாமல் இயங்க முடியாது என்று கூறி உள்ளார். அதோடு தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பெரும் எண்ணிக்கையில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், மேலும் சென்னை மாநகராட்சி பொறுத்தவரை 499 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதும் அதிர்ச்சி அளிக்கிறது.
எனவே, இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தி உள்ளார்.
ஆசிரியர் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு:
தமிழகத்தில் ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றது.
ஆசிரியர் பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் விரைவிலேயே வெளியிடப்படும் எனவும், விரைவிலேயே ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.
CMRF Exam Notification Link:
Apply Link:
Official Website:
Latest Jobs: