தமிழக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவதற்கான தேர்வு! டிஆர்பி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு – TN TRB BRTE Exam 2023

TN TRB BRTE Exam 2023

தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் டிஆர்பி பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள 2222 பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், மேலும் கூடுதலாக ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் சேர்க்கப்பட இருப்பதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

TN TRB BRTE Exam 2023
TN TRB BRTE Exam 2023

பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்:

அரசு பள்ளிகளில் 15000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் முதல் கட்டமாக 2222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் மேலும் ஆயிரம் பணியிடங்கள் சேர்க்கப்பட இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன . இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், பி.ஏ., / பி.எஸ்ஸி-யில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் தொடர்புடைய இளங்கலை கல்வியியல் பட்டம் ( Bachelor in Education (B.Ed.) பெற்றிருக்க வேண்டும்.

மேலும், தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2ல் விண்ணப்பிக்கும் பாடத்திற்கு ஏற்ற விருப்பப்பாடத்துடன் (Optional subject) தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். இந்த பதவிக்கு கட்டாய தமிழ் மொழித் தகுதித் தேர்வு, எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பின் போது ஆசிரியர் தகுதித் தேர்வு II-ம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும்.

அரசு வேலைக்காக தயாராகிக் கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு அனைத்து விதமான தகவல்களையும் Learners Info Website கொடுத்து உங்களை அரசு வேலையில் பணி அமர்த்த உறுதுணையாக இருக்கும்.

மேலும் தகவல்களுக்கு நமது Whatsapp குரூப், டெலிகிராம் குரூப், Whatsapp சேனலில் இணைந்து தினமும் அப்டேட்களை பெற்று தெரிந்து கொள்ளவும். அனைவரும் அரசு வேலையை பெற வாழ்த்துக்கள்.

இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு:

இடைநிலை ஆசிரியர் தேர்வு: இதற்கிடையே, 2000க்கும் அதிகமான இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு குறித்த அறிவிப்பு தனியாக வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.8 ஆண்டுகளுக்குப் பிறகு பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

TN TRB BRTE Job Details 2023:

பதவி:

  • பட்டதாரி ஆசிரியர்

காலியிடங்களின் எண்ணிக்கை:

  • தமிழ் – 394
  • ஆங்கிலம் – 252
  • கணிதம் – 233
  • இயற்பியல் – 293
  • வேதியியல் – 290
  • தாவரவியல் – 131
  • விலங்கியல் – 132
  • வரலாறு – 391
  • புவியியல் – 106 
  • பள்ளி கல்வித்துறையில் காலியிடங்கள்: 2171 (இதில் 171 எஸ்டி பணியிடங்கள்)
  • பிற்பற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் நலத்துறையின் கீழ் உள்ள காலியிடங்கள்: 23
  • ஆதிதிராவிடர் நலத்துறை காலியிடங்கள்: 16
  • மாற்றுத்திறனாளிகள் நலத்துறை காலியிடங்கள்: 12

தமிழ் மீடியத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு அல்லது பட்டம் அல்லது முதுகலை பட்டம் வரை எதுவரை தமிழ் வழியில் படித்துள்ளார்களோ அதனை குறிப்பிட்டு சான்றிதழ் பெற வேண்டும்.

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மொத்தம் உள்ள 2222 இடங்களில் 20 சதவீதம், அதாவது 444 இடங்கள் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வித் தகுதி :

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க பட்டப்படிப்பு மற்றும் பி.எட். முடித்திருக்க வேண்டும். டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி இருக்க வேண்டும்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதியம்:

பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஊதியம் குறித்தும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ரூ.36400-115700 (Level 16) சம்பளம் கிடைக்கும் .

தேர்வு செய்யப்படும் முறை :

  • Written Examination வைத்து வேலைக்கு தேர்வு செய்யப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் Online மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

How to TRB BRTE Job Recruitment 2023?

  • விண்ணப்பதாரர்கள் Online ல் விண்ணப்பிக்கலாம்
  • அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரங்களைக் கண்டறியவும்.
  • எந்த தவறும் இல்லாமல் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.
  • தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
  • உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி :

பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு 2023க்கு 01.11.2023 முதல் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி :

பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு 2023க்கு விண்ணப்பிக்க 30.11.2023 கடைசி தேதி.

தேர்வு தேதி :

  • 07.01.2024

இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.

Whatsapp Join
Whatsapp Channel Join
Telegram Channel Join

 

TN TRB BRTE Exam 2023
TN TRB BRTE Exam 2023

TN TRB BRTE Exam Apply:

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

Notification Link:

Apply Link:

For More Job Info:

Leave a Comment

Join Group!
error: Content is protected !!