தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு! TN Schools Reopen Date 2023

TN Schools Reopen Date 2023

 

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் இறுதியில் ஆண்டு இறுதித் தேர்வுகள் முடிந்தன. இதனையடுத்து, தற்போது கோடை விடுமுறையில் மாணவர்கள் உள்ளனர். இந்தநிலையில் தமிழகத்தில் திட்டமிட்டப்படி ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

TN Schools Reopen Date 2023
TN Schools Reopen Date 2023

தமிழகத்தில்  கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதேநேரம் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5 ஆம் தேதி பள்ளிகள் திறக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனிடையே தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால், பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகுமா என மாணவர்களும் பெற்றோர்களும் எதிர்ப்பார்த்து காத்திருந்தனர்.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி:

இந்தநிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் பள்ளிகள் நிச்சயம் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதிபட தெரிவித்துள்ளார். இதனால், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 1 ஆம் தேதியும், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்பது உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து, பள்ளிகள் திறப்பிற்கான ஏற்பாடுகளும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் செய்யப்பட்டு வருகின்றன. அரசுப் பள்ளிகளில் படிக்கக் கூடிய மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட் புத்தகங்கள் உள்ளிட்ட பல வகையான பொருட்கள் வழங்குவதற்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

TN Schools Reopen Date 2023
TN Schools Reopen Date 2023

Latest Jobs:

For More Job Info Join:

Whatsapp Join

Leave a Comment

Join Group!
error: Content is protected !!