TN Schools and College Today Heavy Rain Holiday 2023
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று டிசம்பர் 2ஆம் தேதி புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 5ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு:
இதனிடையே, வட இலங்கை பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், இன்று முதல் டிசம்பர் 5ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுச்சேரி, காரைக்காலிலும் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டிசம்பர் 2 மற்றும் 3ஆம் தேதிகளில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழையின் தீவிரத்தை பொறுத்து மற்ற மாவட்டங்களிலும் விடுமுறை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:
கனமழை காரணமாக இன்று வியாழக்கிழமை பல மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
1. சென்னை (பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை)
2.காஞ்சிபுரம் (பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை)
3.திருவள்ளூர் (பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை)
4.ராணிப்பேட்டை (பள்ளிகளுக்கு விடுமுறை)
5.திருவள்ளூர் (பள்ளிகளுக்கு விடுமுறை)
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.