TN School Students Summer Holidays 2024
தமிழகத்தில் மக்களவை தேர்தல் 2024 ஏப்ரல் 19ஆம் தேதி அன்று 22 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடத்தப்பட உள்ளது. இதனால் தேர்தல் பணிக்கு ஏதுவாக ஏப்ரல் 13-ஆம் தேதி முதல் பள்ளிகள் அனைத்தும் தேர்தல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட உள்ளது.
தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வுகள் தொடர்பான அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் தற்போது கோடை விடுமுறையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
கோடை விடுமுறை:
தமிழகத்தில் ஏப்ரல் 12ஆம் தேதிக்குள் தேர்வுகள் நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் ஏப்ரல் 11ஆம் தேதி அன்று ரமலான் பண்டிகை வர உள்ளதால் ஏப்ரல் 10 மற்றும் 12ஆம் தேதி நடக்க இருந்த அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வுகள் முறையே ஏப்ரல் 22 மற்றும் 23ஆம் தேதி நடக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதனால் ஏப்ரல் 13ஆம் தேதி முதல் தொடங்க இருந்த கோடை விடுமுறையில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் 22 மற்றும் 23ஆம் தேதி பள்ளிக்கு வரவேண்டிய சூழல் உள்ளதால் கோடை கால விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டு இருந்த மக்கள் தற்போது பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏப்ரல் 24ஆம் தேதிக்கு பிறகு தான் கோடை விடுமுறையில் சுற்றுலா அல்லது சொந்த ஊர்களுக்கு செல்லும் திட்டங்களை மக்கள் செயல்படுத்த வேண்டியுள்ளது.
புதிய தேர்வு அட்டவணை:
புதிய தேர்வு அட்டவணையில் கோடை விடுமுறை குறித்த தகவல்கள் இடம் பெறவில்லை. இதனால் மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வர வேண்டுமா என கேள்விகள் எழுந்தன. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
கோடை விடுமுறையில் எந்த மாற்றமும் இல்லை:
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மாணவர்கள் ஏப்ரல் 8-ம் தேதிக்கு பின்னர் 2 தேர்வுகளை எழுத மட்டும் பள்ளிக்கு வரவேண்டும். அதாவது, ஏப்ரல் 22, 23-ம் தேதிகளில் நடைபெறவுள்ள அறிவியல், சமூக அறிவியல் பாடத்தேர்வு களுக்கு வந்தால் மட்டும் போதும்.
திறப்பு தேதி பின்னர் அறிவிப்பு: எனினும், மாணவர் சேர்க்கை, தேர்வு மற்றும் தேர்தல் பணிகளை மேற்கொள்ள ஆசிரியர்கள் ஏப்ரல் 26-ம் தேதி வரை தொடர்ந்து பள்ளிக்கு வரவேண்டும். கோடைவிடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்’’ என்றனர்.
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.
TNPSC Whatsapp Group | Join |
Government Job Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram Channel | Join |
For More Job Info: