TN School Students Rain Holiday Possible Districts Tomorrow
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதற்கிடையில் வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்தது.

கோடை வெயிலின் வெப்பத்தால் அவதிபட்டு வந்த மக்களுக்கு 2 நாட்கள் பெய்த மழை இதமாக இருந்தது. 3 மாதங்கள் சுட்டெரித்த வெயில் பாதிப்பில் இருந்து மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு உள்ளது.
நாளை எந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு:
ஒரு சில நேரத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும். அதன்படி இந்த மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று காலையில் லேசான மழை பெய்தது. சென்னை மற்றும் புறநகரையொட்டிய மாவட்டங்களில் மழை தூறல் இருந்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மழை சிறுசிறு தூறலாக பெய்தது. இதேபோல காஞ்சிபுரம், செங்கல்பட்டிலும் இன்று காணப்பட்டது.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு நாளை எந்த மாவட்டங்களில் கனமழையால் விடுமுறை அளிக்க வாய்ப்பு:
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 26 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் ஒருசில இடங்களில் நாளை மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்து உள்ளது. கனமழை தொடரும் என வானிலை மையம் கூறியுள்ளதால், தமிழக பள்ளி மாணவர்களுக்கு நாளை கனமழை காரணமாக இந்த மாவட்டங்களில் விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
பள்ளிகள் விடுமுறையை ஈடுசெய்ய:
இந்த விடுமுறையை ஈடுசெய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், சென்னை உட்பட பல்வேறு இடங்களில் நள்ளிரவு பெய்த கனமழை ஆங்காங்கே தேங்கியிருந்தது. ஆனால் தற்போது அதெல்லாம் சரி செய்து தண்ணீர் அக்கற்றம் செய்யப்பட்டது. அந்த வகையில், பள்ளி வளாகங்களில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Latest Updates:
For More Job Info Join:
| Join |





