TN School Students Quarterly Exam Question Paper Out 2023
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு நிதியுதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் நடப்பு 2023-24ஆம் கல்வியாண்டில் 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு செப்டம்பர் 15ஆம் தேதி காலாண்டு தேர்வுகள் தொடங்கின. இதையடுத்து 6 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு செப்டம்பர் 18ஆம் தேதி தேர்வுகள் தொடங்கின.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு வினா தாள்கள் இணையத்தில் வெளியாகி உள்ளதாக தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு முக்கிய வினா விடைகள்! – Click Here
காலாண்டு தேர்வு வினாத்தாள் லீக்:
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு கடந்த ஆண்டு மூன்றாம் வகுப்பு வரை எண்ணும் எழுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்ட நிலையில், நடப்பு ஆண்டில் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் எண்ணும் எழுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் மாணவர்கள் அடிப்படை அறிவை வளர்த்துக் கொள்வதற்கான படிநிலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நடப்பாண்டு காலாண்டு தேர்வு நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 20ம் தேதி ஆன இன்று முதல் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பள்ளிகளுக்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மாணவர்களுக்கான வினா தாள்கள் வெளியிடப்பட்டு பள்ளிகள் தேவைக்கு ஏற்ப அதனை பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவித்தப்பட்டது.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை மிக முக்கிய அறிவிப்பு! – Click Here
நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் , சமூக அறிவியல் போன்ற ஐந்து பாடங்களுக்கும் காலாண்டு வினாத்தாள் வாட்ஸ் அப்பில் வெளியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. வினாத்தாள் வாட்ஸ் அப்பில் வெளியான தகவல் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
காலாண்டு தேர்வு மறுபடியும் நடைபெற வாய்ப்பு:
நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் , சமூக அறிவியல் போன்ற ஐந்து பாடங்களுக்கும் காலாண்டு வினாத்தாள் வாட்ஸ் அப்பில் வெளியாகியுள்ள காரணத்தால் அவர்களுக்கு மறுதேர்வு நடைபெற வாய்ப்பு உள்ளதா என்பது சந்தேகம் எழுந்துள்ளது.
Latest Updates:
For More Job Info Join:
Join |