TN School Students Quarterly Exam Leave Extend 2023
தமிழகத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 5 நாட்கள் மட்டுமே விடுமுறை என்பது கவனிக்கத்தக்கது.

தமிழகத்தில் அரசு, அரசு நிதியுதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் காலாண்டு தேர்வுகள் நடைபெறும். அந்த வகையில் நடப்பு 2023-24ஆம் கல்வியாண்டில் 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு செப்டம்பர் 15ஆம் தேதி காலாண்டு தேர்வுகள் தொடங்கின.
இதையடுத்து 6 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு செப்டம்பர் 18ஆம் தேதி தேர்வுகள் தொடங்கின.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு முக்கிய வினா விடைகள்! – Click Here
காலாண்டு விடுமுறை:
6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு செப்டம்பர் 27ஆம் தேதியுடன் தேர்வுகள் முடிவடைகின்றன. உடனே காலாண்டு விடுமுறை தொடங்கி விடுகிறது.
அதாவது, செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை தான். அதாவது 5 நாட்கள் மட்டுமே விடுமுறை என்பது கவனிக்கத்தக்கது. செப்டம்பர் 28ஆம் தேதி மிலாடி என்பதால் அரசு விடுமுறையாக அமைந்து விடுகிறது.
29ஆம் தேதி ஒரே ஒரு நாள் தான் தேர்வு விடுமுறை எனக் கூறும் வகையில் அமைந்துள்ளது. அன்றைய தினம் வெள்ளிக்கிழமை. இதையடுத்து செப்டம்பர் 30, அக்டோபர் 1 ஆகியவை சனி, ஞாயிறு என வார இறுதி நாட்களாக வந்துவிடுகிறது.
அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அரசு விடுமுறை ஆகும். இதையடுத்து அக்டோபர் 3 செவ்வாய் அன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
10 நாட்களாவது காலாண்டு விடுமுறை:
குறைந்தது 10 நாட்களாவது காலாண்டு விடுமுறை கிடைக்கும் என மாணவ, மாணவிகள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அதில் பாதி மட்டுமே விடுமுறையாக கிடைத்திருக்கிறது.
இதன்மூலம் செப்டம்பர் 2023ல் அரசு பள்ளிகளின் வேலை நாட்கள் என்பது 18ஆக அமைந்துள்ளது. இதுதவிர செப்டம்பர் 1 முதல் அக்டோபர் 16ஆம் வரையிலான காலகட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள் தொடர்பான அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
காலாண்டு விடுமுறை நீட்டிப்பு:
தமிழகத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 5 நாட்கள் மட்டுமே விடுமுறை என்பது கவனிக்கத்தக்கது. நீட்டிப்பு குறித்து கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகலாம். பொறுத்து இருந்து பார்ப்போம்.

Latest Updates:
For More Job Info Join:
| Join |





