காலாண்டு தேர்வு எழுதும் மாணவர்களே! இதை படித்து தெரிந்து கொண்டு தேர்வுக்கு செல்லவும் – TN School Students Quarterly Exam Instructions 2023

TN School Students Quarterly Exam Instructions 2023

காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் 27ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

TN School Students Quarterly Exam Instructions 2023
TN School Students Quarterly Exam Instructions 2023

பொது வினாத்தாளுடன் கூடிய காலாண்டுத் தேர்வு அட்டவணையை மாநிலத் திட்ட இயக்குநர் வெளியிட்டுள்ளார். இதன்படி காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் 27ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

தமிழ்நாடு மாநிலக் கல்வி வாரியத்தின்கீழ் செயல்படும் பள்ளிகளுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியாகி உள்ளது. இதன்படி 6 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 19ஆம் தேதியும் 11, 12ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 15ஆம் தேதியும் காலாண்டுத் தேர்வுகள் தொடங்க உள்ளன. இந்தத் தேர்வு செப்டம்பர் 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

வினாத்தாள் தயாரிப்பு பணிகள்:

6 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு 19ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நடக்கிறது. இந்நிலையில் தேர்விற்கான வினாத்தாள் தயாரிப்பு பணிகள் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டது. சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டும் பொது வினாத்தாள் முறையை அமல்படுத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை SCERT எனப்படும் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் மேற்கொண்டது.

முன்பெல்லாம் காலாண்டு, அரையாண்டு வினாத்தாள்கள் மாவட்ட கல்வி அலுவலகங்களில் இருந்து ஒவ்வொரு பள்ளிக்கும் சீல் வைக்கப்பட்ட கவர்கள் மூலம் கொண்டு செல்லப்படும். இதனால் சில சமயங்களில் வினாத்தாள் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது. இத்தகைய குறைபாட்டை தவிர்க்கும் வகையில் அரசு பள்ளிகளுக்கான அதிகாரப்பூர்வ அரசு இணையதளத்தில் வினாத்தாள் பதிவேற்றம் செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழக பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை காலாண்டு தேர்வுக்கான விடுமுறை தேதிகள் – Click Here

இணையதளம் மூலம் வினாத்தாள்கள்:

காலாண்டு வினாத்தாள்கள் exam.tnschools.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இதிலிருந்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதை போதிய அளவில் பிரிண்ட் போட்டு மாணவ, மாணவிகளுக்கு வழங்கி தேர்வுகளை உரிய முறையில் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான மாதிரி ஏற்பாடுகள் கடந்த ஆண்டே நடைபெற்றது.

அனைத்து பள்ளிகளுக்கும் விரிவாக்கம்

அப்போது சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் காலாண்டு தேர்வு வினாத்தாள்கள் அரசு பள்ளிகளின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பிரிண்ட் போட்டு நடத்தப்பட்டது. இதற்கு வரவேற்பு கிடைத்த நிலையில், நடப்பாண்டு அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியும் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட UDISE எண்ணுடன் சேர்த்து வினாத்தாளை அச்சிட வேண்டியது அவசியம்.

கருத்து கேட்பு:

காலாண்டு தேர்வில் ஒவ்வொரு தாள் நடைபெறும் தேதிக்கு ஒருநாள் முன்பாக வினாத்தாளை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த விதிமுறையை மிகவும் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும். ஒவ்வொரு தாள் தேர்வும் முடிந்த பின்னர், இதுதொடர்பான கருத்துகளை பதிவு செய்ய வேண்டும். இதன்மூலம் அடுத்தகட்டமாக சில விஷயங்களை மேம்படுத்த முடியும் என்று எஸ்.எஸ்.ஏ திட்ட இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயமும் இருக்கிறது.

தமிழக பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுகான டைம் டேபிள்! எந்த எந்த தேதிகளில் என்ன தேர்வு நடைபெறுகிறது- Click Here

ஒரே மாதிரியான வினாத்தாள்கள்:

அனைத்து பள்ளிகளுக்கு ஒரே மாதிரியான வினாத்தாள்கள் வராது. பல்வேறு வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளதால் பள்ளிகள் மாறுபட்ட வினாத்தாள்களை பெறும் என்பது கவனிக்கத்தக்கது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் பள்ளிக் கல்வித்துறை மூலம் பிரிண்டர் மற்றும் பேப்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. இதை கொண்டே காலாண்டு தேர்விற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அரசு பள்ளிகள் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து தேர்வுகள் நடத்துவதன் மூலம் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின் தரம் சற்றே உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TN School Students Quarterly Exam Instructions 2023
TN School Students Quarterly Exam Instructions 2023

Latest School Updates:

For More School Info Join:

Whatsapp Join

Leave a Comment

Join Group!
error: Content is protected !!