TN School Students Quarterly Exam Dates Announced 2023
தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் துவங்கிய பள்ளிகளில் அப்போதே 2023 – 2024ம் கல்வியாண்டிற்கான பாடத்திட்டங்கள் துவங்கிவிட்டது. இந்நிலையில் பாடங்கள் துவங்கி மூன்று மாதங்கள் முடிந்துவிட்டன.
நடப்பு கல்வி ஆண்டில் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற உள்ள காலாண்டு தேர்வுகளுக்கான உத்தேச காலஅட்டவணை வெளியாகியுள்ளது.
முதல் பருவத் தேர்வு:
திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், திருவள்ளூர் மாவட்டம் 2023-2024ம் கல்வியாண்டில் அரசு / அரசு உதவிபெறும் / நகராட்சி / ஆதிந பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியர்களுக்கான முதல் பருவத் தேர்வு 10.08.2023 முதல் 18.08.2023 வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது என அறிவித்துள்ளனர். அந்த அறிவிப்போடு சேர்த்து 6 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கான அட்டவணையும் வெளியிட்டுள்ளது.
6-10ம் வகுப்பு:
6-10ம் வகுப்பு மாணவர்களுக்கு 10ம் தேதி துவங்கும் தமிழ் தேர்வு, 11ம் தேதி ஆங்கில தேர்வு, 12ம் தேதி கணித தேர்வு, 14ம் தேதி அறிவியல் தேர்வு, என 16ம் தேதி சமூக அறிவியல் தேர்வோடு நிறைவு பெறுகிறது.
மேல்நிலை வகுப்புகள்:
11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 10ம் தேதி மொழித்தேர்வு துவங்கி 18ம் தேதியோடு அனைத்து தேர்வுகளும் நிறைவு பெறுகிறது. 6,8,10,12 ஆகிய வகுப்புகளுக்கு தேர்வு காலையிலும், 7,9,11ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு பிற்பகலிலும் நடைபெறும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலாண்டு தேர்வுகள்:
சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 12-ம்வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டில் (2023-24) பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. மாணவர்கள் நலன் கருதி, அதற்கான உத்தேச கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வுகள் செப்.15 முதல் 27-ம் தேதி வரையும், அரையாண்டு தேர்வுகள் டிச.11 முதல் 22-ம் தேதி வரையும் நடைபெறும். 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டு தேர்வு ஏப்ரல் 3-வது வாரத்தில் நடத்தப்படும்.
இதுதவிர 10, 11, 12-ம் வகுப்புக்கான அலகு மற்றும் திருப்புதல் தேர்வுகள், 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கான பருவத் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்ற விவரமும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றை பின்பற்றி மாணவர்களை தேர்வுகளுக்கு தயார்படுத்த அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Latest Updates:
For More Job Info Join:
Join |