10ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு டைம்டேபிள் வெளியீடு! தேர்வு விவரம் – TN School Students Public Exam Time Table 2024

TN School Students Public Exam Time Table 2024

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் அரசு சார்பில் பொதுத் தேர்வு நடத்தப்படுவது வழக்கம்.

TN School Students Public Exam Time Table 2024
TN School Students Public Exam Time Table 2024

செய்முறை தேர்வு தொடங்கி எழுத்துத் தேர்வு நடைபெறும். அந்த வகையில் இந்தாண்டிற்கான 2023-24 கல்வியாண்டிற்கான பொதுத் தேர்வு அட்டவணையை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழி இன்று காலை வெளியிட்டார்.

அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்து உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து  பொதுத் தேர்வுகளுக்கான அட்டவணையை வெளியிட்டு உள்ளார். அதன்படி 10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு முதலில் செய்முறைத் தேர்வு நடைபெறுகிறது. 

செய்முறைத் தேர்வு நடைபெறும் தேதிகள்:

  • 10 ஆம் வகுப்புக்கான செய்முறை தேர்வுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 23 ஆம் தேதி தொடங்கப்பட்டு பிப்ரவரி 29 ஆம் தேதி முடிவடைகிறது.
  • 11 ஆம் வகுப்புக்கான செய்முறை தேர்வுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கப்பட்டு பிப்ரவரி 24 ஆம் தேதி முடிவடைகிறது.
  • 12 ஆம் வகுப்புக்கான செய்முறை தேர்வுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி தொடங்கப்பட்டு பிப்ரவரி 17 ஆம் தேதி முடிவடைகிறது.

பொதுத்தேர்வு நடைபெறும் தேதிகள்:

12ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை:

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு 2024-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெறுகிறது.

11ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை:

11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 4-ம் தேதி பொதுத் தேர்வு தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெறுகிறது.

11th and 12th Timetable PDF:

10ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை:

10-ம் வகுப்புக்கு மார்ச் 26-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெறுகிறது.

  • 26.03.2024      தமிழ், இதர மொழிப்பாடங்கள்
  • 28.03.2024      ஆங்கிலம்
  • 01.04.2024      கணிதம்
  • 04.04.2024      அறிவியல்
  • 06.04.2024      விருப்ப மொழிப்பாடம்
  • 08.04.2024      சமூக அறிவியல்

பொதுத்தேர்வுக்கான தேர்வு முடிவுகள் :

  • 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேர்வு முடிவுகள் அடுத்த ஆண்டு மே 10 ஆம் தேதி வெளியிடப்படும்.
  • 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேர்வு முடிவுகள் மே 14 ஆம் தேதி வெளியிடப்படும்.
  • 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேர்வு முடிவுகள் மே 6 ஆம் தேதி வெளியிடப்படும்.
TN School Students Public Exam Time Table 2024
TN School Students Public Exam Time Table 2024

இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.

Whatsapp Join
Whatsapp Channel Join
Telegram Channel Join

 

For More Info:

Leave a Comment

Join Group!
error: Content is protected !!