TN School Students Leave Chance Tomorrow Due To Heavy Rain
கோடை வெயிலாக அவதிப்பட்டு வந்த சென்னை மக்களை கடந்த சில நாட்களாக மழை குளிர்வித்தது. கடந்த 2 நாட்களாக ஓய்வு எடுத்து இருந்த மழை இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கி வருகிறது.

தமிழகத்தின் எந்த மாவட்டங்களில் நாளை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது :
நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, எழும்பூர், தேனாம்பேட்டை, சேப்பாக்கம், அம்பத்தூர், முகப்பேர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், சேலம், நாமக்கல், கோவை, நீலகிரி மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு நாளை எந்த மாவட்டங்களில் கனமழையால் விடுமுறை அளிக்க வாய்ப்பு:
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், சேலம், நாமக்கல், கோவை, நீலகிரி மாவட்டங்களில் நாளை மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்து உள்ளது. கனமழை தொடரும் என வானிலை மையம் கூறியுள்ளதால், தமிழக பள்ளி மாணவர்களுக்கு நாளை கனமழை காரணமாக இந்த மாவட்டங்களில் விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென் இந்திய பகுதிகளின் மேல், மேலடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக,
22.06.2023 மற்றும் 23.06.2023:
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
24.06.2023 முதல் 26.06.2023 வரை:
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
பள்ளிகள் விடுமுறையை ஈடுசெய்ய:
இந்த விடுமுறையை ஈடுசெய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், சென்னை உட்பட பல்வேறு இடங்களில் நள்ளிரவு பெய்த கனமழை ஆங்காங்கே தேங்கியிருந்தது. ஆனால் தற்போது அதெல்லாம் சரி செய்து தண்ணீர் அக்கற்றம் செய்யப்பட்டது. அந்த வகையில், பள்ளி வளாகங்களில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Latest Updates:
For More Job Info Join:
| Join |





