TN School Students Due to Rain These Districts Having Leave Chance Tomorrow
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை:
அதன்படி, தமிழகத்தின் திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், திருவண்ணாமலை, திருப்பூர், தேனி, மயிலாடுதுறை, நாகை, தென்காசி, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருவாரூர், கோயம்புத்தூர், திண்டுக்கல், விருதுநகர், கன்னியாகுமாரி போன்ற 23 மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.
வரும் 6ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு:
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 6ம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை பெய்யக்கூடும்.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு நாளை எந்த மாவட்டங்களில் கனமழையால் விடுமுறை அளிக்க வாய்ப்பு:
தமிழகத்தின் திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், திருவண்ணாமலை, திருப்பூர், தேனி, மயிலாடுதுறை, நாகை, தென்காசி, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருவாரூர், கோயம்புத்தூர், திண்டுக்கல், விருதுநகர், கன்னியாகுமாரி போன்ற 23 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை காரணமாக இந்த மாவட்டங்களில் விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
பள்ளிகள் விடுமுறையை ஈடுசெய்ய:
இந்த விடுமுறையை ஈடுசெய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், சென்னை உட்பட பல்வேறு இடங்களில் நள்ளிரவு பெய்த கனமழை ஆங்காங்கே தேங்கியிருந்தது. ஆனால் தற்போது அதெல்லாம் சரி செய்து தண்ணீர் அக்கற்றம் செய்யப்பட்டது. அந்த வகையில், பள்ளி வளாகங்களில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Latest Updates:
For More Job Info Join:
Join |