TN School Reopen Possible to Change Again 2023
தமிழகம் முழுவதும் 7-ந்தேதிக்கு பதில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஜூன் 14ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் சமயத்தில் வெயில் குறைந்து விடும் என கணிக்கப்பட்டது. ஆனால் இப்போது வெயில் குறைவதற்கான அறிகுறியே தென்படவில்லை.

தமிழகத்தில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து கொண்டே தான் வருகிறது. அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் வெயிலின் உக்கிரம் குறையவில்லை. சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் 108 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்துகிறது. இயல்பாக பதிவாகும் வெப்ப அளவை விட கடந்த சில நாட்களாக வெப்பத்தின் அளவு அதிகமாகவே காணப்படுகிறது.
நாடு முழுவதும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் வெயில் அதிகமாக இருப்பதால் பல மாநிலங்களில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் கோடை விடுமுறை மேலும் 11 நாட்கள் நீட்டிப்பு:
அந்த வரிசையில் உத்திரபிரதேசம் மாநிலத்தில் கோடை விடுமுறை மேலும் 11 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இனி பள்ளிகள் ஜூன் 27 ஆம் தேதி தான் மீண்டும் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உலக யோகா தினம் ஜூன் 21 ஆம் தேதி என்பதால் அன்றைய தினம் பள்ளிகள் திறக்கப்பட்டு பள்ளியில் குழந்தைகளுக்கு யோகா பயிற்சிகள் நடத்தப்படும். பின்னர் இனிப்புகள், பழங்கள், சுத்தமான குடிநீர் வழங்கப்படும் எனவும் ஜூன் 20 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட்டு மறுநாளுக்கு தேவையான தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படும்.
மேலும் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 27 ஆம் தேதி பள்ளிகள் திறப்பதற்கு முன் தூய்மை, குடிநீர், குழந்தைகளுக்கான இருக்கை வசதி, கழிவறைகளை சுத்தம் செய்தல் போன்றவற்றை சரியான முறையில் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என கல்வித்துறை செயலாளர் அறிவுறுத்தி இருக்கிறார்.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிபோகுமா!
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மற்ற மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதா என்று பார்த்தால் அதற்கு வாய்ப்புகள் மிக குறைவு. ஏற்கனவே இரு முறை பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்ட காரணத்தால் திட்டமிட்டபடி தமிழகத்தில்ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஜூன் 14ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பள்ளி திறந்தவுடன் மாணவர்களுக்கு புத்தக விநியோகம்:






