தமிழக பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறைக்கு பின் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்! இன்று வெளியான புதிய தகவல் – TN School Reopen After Quarterly Exam Leave 2023

TN School Reopen After Quarterly Exam Leave 2023

தமிழகத்தில் அரசு, அரசு நிதியுதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் காலாண்டு தேர்வுகள் நடைபெறும். அந்த வகையில் நடப்பு 2023-24ஆம் கல்வியாண்டில் 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு செப்டம்பர் 15ஆம் தேதி காலாண்டு தேர்வுகள் தொடங்கின.

TN School Reopen After Quarterly Exam Leave 2023
TN School Reopen After Quarterly Exam Leave 2023

இதையடுத்து 6 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு செப்டம்பர் 18ஆம் தேதி தேர்வுகள் தொடங்கின. 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு செப்டம்பர் 27ஆம் தேதியுடன் தேர்வுகள் நிறைவடைந்தது. உடனே காலாண்டு விடுமுறை தொடங்கி விடுகிறது. 

தனியார் பள்ளிகளும் காலாண்டு விடுமுறை:

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின்கிழ் இயங்கும் அனைத்து தனியார் பள்ளிகளும் காலாண்டு விடுமுறை முடிந்து அக்டோபர் 3ஆம் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் காலாண்டு தேர்வு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. 2 வாரங்கள் நடந்த தேர்வு  (27.09.2023) நிறைவடைந்தது.

ஒன்றாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை:

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 8ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டது.

6 முதல் 12ஆம் வகுப்பு வரை:

பள்ளிக் கல்வி இயக்குநரின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு 28ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:

இந்த நிலையில் மாநில பாடத்திட்டத்தில் செயல்படும் அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் காலாண்டுத் தேர்வுகள் விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தனியார் பள்ளிகள் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், காலாண்டு விடுமுறைக்குப் பின் அக்டோபர் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நாளில் அனைத்து வகை தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட வேண்டும் என அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

11 நாட்களுக்கு முதல் பருவத் தேர்வு விடுமுறை:

ஒன்று முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்விற்கு பதிலாக ”முதல் பருவத் தேர்வு” என்ற பெயரில் தான் தேர்வுகள் நடத்தப்படும். இருப்பினும் வழக்கமாக சொல்லும் காலாண்டு தேர்வுகள் என்றே சிலர் அழைப்பர்.

அதன்படி, மேற்குறிப்பிட்ட 11 நாட்களுக்கு முதல் பருவத் தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஒன்று முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் அக்டோபர் 9ஆம் தேதி அன்று திறக்கப்படுகின்றன. இந்த தேதியில் இருந்து வழக்கம் போல் பள்ளிகள் மீண்டும் செயல்படும்.

இரண்டாம் பருவத்திற்கான பயிற்சி:

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கற்பித்தல் பணியை மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

ஒன்றியம்தோறும் அக்டோபர் 3 முதல் 6ஆம் தேதி வரை இரண்டு கட்டங்களாக வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் பணிகளை மேற்கொள்ளும் ஆசிரியர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

TN School Reopen After Quarterly Exam Leave 2023
TN School Reopen After Quarterly Exam Leave 2023

Latest Updates:

For More Job Info Join:

Whatsapp Join

Leave a Comment

Join Group!
error: Content is protected !!