TN School Reopen 2023 Good News For Students
முழு ஆண்டுத் தேர்வுகளானது அனைத்துப் பள்ளிகளிலும் முடிக்கப்பட்டு தற்போது மாணவர்களுக்கு கோடைவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோடை விடுமுறையானது தற்போது முடிவடைய உள்ள நிலையில் அடுத்தக் கல்வியாண்டிற்கான வகுப்புகளானது வரும் ஜூன்-7 லிருந்து துவங்கப்பட உள்ளது.

தமிழகத்தில் ஜூன் 7 பள்ளிகள் திறப்பு :
அமைச்சர் அன்பில் மகேஷ் முதலமைச்சரின் ஆலோசனையின் அடிப்படையில் கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் ஜூன் 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்படும்”, என்றார்.
பள்ளிகள் திறப்பு மாணவர்களுக்கான குட் நியூஸ்:
அடுத்தக் கல்வியாண்டிற்கான வகுப்புகளானது வரும் ஜூன்-7 லிருந்து துவங்கப்பட உள்ளது. இதனையடுத்து, பள்ளிக்கல்வித்துறையானது காலம் தாழ்த்தாமல் மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்தவுடன் பேக்குகள் மற்றும் நோட்டு புத்தகங்களை அளிக்க திட்டமிட்டிருக்கின்றது.
மேலும் அதற்கு முன்னதாகவே கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அம்மாவட்டத்தில் இருக்கும் 281 பள்ளிகளுக்குமான புத்தகங்கள் மற்றும் பேக்குகளானது வைக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து மாவட்டத்தில் இருக்கும் அந்தந்த பள்ளிகளுக்கு புத்தகங்கள் மற்றும் பேக்குகளை வாகனங்கள் மூலமாக அனுப்பி வைக்கும் பணியானது தீவிரமுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
பள்ளிக் கல்வித் துறையானது ஜூன்-7 ஆம் தேதி பள்ளிகள் திறந்தவுடன் அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் இவைகளை உடனடியாக அளிக்க ஏற்பாடு செய்திருக்கிறது.
தமிழகத்தில் ஜூன் 7 பள்ளிகள் திறந்ததும் பள்ளி கல்வித்துறை வெளியிட்ட முக்கிய உத்தரவு:
1 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளும் ஜுன் 7ம் தேதி தொடங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். இந்த நிலையில் பள்ளி தொடங்கிய 2 நாட்களில், அதாவது 9-ந் தேதி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவு வெளியிட்டு உள்ளது.
இந்த குழு கூட்டத்தில் பள்ளி இடைநிற்றல் தடுப்பது பற்றி ஆலோசனை செய்யப்படும். புதிய கல்வி ஆண்டில் வகுப்புகளுக்கு வராத மாணவர்கள் லிஸ்ட் எடுக்கப்பட்டு அதை பற்றி ஆலோசனை செய்யப்படும். அவர்களை மீண்டும் பள்ளிக்கு கொண்டு வருவது பற்றி ஆலோசனை செய்யப்படும்.
மாற்றுத் திறன் குழந்தைகள் இருந்து, அவர்கள் வகுப்புகளுக்கு சேராமல் இருந்தால் அவர்களை மீண்டும் வகுப்புகளுக்கு சேர்த்துக்கொள்வது குறித்து ஆலோசனை செய்யப்படும். இது போன்ற சிறப்பு தேவை கொண்ட மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெறுவதை உறுதி செய்வது தொடர்பாகவும் இதில் ஆலோசனை செய்யப்படும்.
அதேபோல் இல்லம் தேடி கல்வி திட்டத்தை இன்னும் சிறப்பாக செயல்படுத்துவது தொடர்பாகவும் இந்த குழு கூட்டத்தில் முக்கியமான ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது. இந்த குழுவில் உள்ளவர்கள் கண்டிப்பாக வரும் 9ம் தேதி கூட்டத்தை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Latest Updates:
For More Job Info Join:
| Join |





