TN School Rain Holiday Today 2024
TN School Leave: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் காட்டி வருகிறது. இதையொட்டி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து கொண்டிருக்கிறது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக நகர்ந்து வருகிறது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கில் நகர்ந்து படிப்படியாக வலுவிழந்து விடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவக்கூடும்.
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை:
தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடியில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், விழுப்புரம், திருச்சி மற்றும் தேனியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறையும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கனமழை காரணமாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. நெல்லையில் முக்கிய அணைகளிலிருந்து உபரிநீர் அப்படியே திறந்துவிடப்படுவதால் மக்கள் குடியிருப்பு பகுதியில் நீர் வெள்ளமாக தேங்கியிருக்கிறது.
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய இணையதளப் பக்க தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.