TN School and College Rain Holidays 2023
கனமழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 6 தென் மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று திங்கள்கிழமை 18.12.2023 விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
குமரிக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி மெதுவாக நகர்ந்து வருகிறது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி உள்ளி்டட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், இதனால், சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை:
இந்நிலையில், தென் மாவட்டங்களில் இன்று (18.12.2023) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனால், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 6 தென் மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று திங்கள்கிழமை (18.12.2023) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு ஒத்திவைப்பு:
மேலும் கனமழை காரணமாக, திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும் அதற்கு உட்பட்ட கல்லூரிகளில் திங்கள்கிழமை (18.12.2023) நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகர் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நாளை நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைகக்ப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.