தமிழ்நாடு மின் வாரியத்தில் 55000 பணியிடங்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதிங்க – TN Electricity Board 55000 Job Vacancy Announcement 2023 

TN Electricity Board 55000 Job Vacancy Announcement 2023 

தமிழ்நாடு மின்சார வாரியம் (Tamil Nadu Electricity Board – TNEB) சூலை 01, 1957இல் சட்டப்படி உருவாக்கப்பட்ட ஓர் பொதுத்துறை அமைப்பாகும். மின்சார வழங்கல் சட்டம், 1948இன் கீழ் அந்நாளைய அரசின் மின்சாரத்துறைக்கு மாற்றாக அமைக்கப்பட்டது. இது தமிழக அரசின் ஆற்றல் துறையின் கீழ் இயங்குகிறது.

TN Electricity Board 55000 Job Vacancy Announcement 2023 
TN Electricity Board 55000 Job Vacancy Announcement 2023

மின் வாரியத்தில் காலி பணியிடங்கள்:

தமிழ்நாடு மின் வாரியத்தில் கடந்த மார்ச் மாத நிலவரப்படி, காலி பணியிடங்களின் எண்ணிக்கை, 55,000ஐ தாண்டியுள்ளது. தமிழக மின் வாரியத்தில், தொழில்நுட்பம், கணக்கு, தணிக்கை, செயலகம், நிர்வாகம் போன்ற பிரிவுகள் உள்ளன. அவற்றில் உதவி பொறியாளர், கணக்கீட்டாளர் உள்ளிட்ட பதவிகளில், பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.

மின் வாரியத்தில் பணியிடங்களின் மொத்த எண்ணிக்கை, 1.44 லட்சம். இந்தாண்டு மார்ச் நிலவரப்படி, 88,774 பேர் பணிபுரிகின்றனர். இதனால், மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை, 55,295 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு, இதே காலத்துடன் ஒப்பிடும் போது, 2,001 பேர் ஓய்வு பெற்று உள்ளனர்.அதிக காலி பணியிடங்களால், மின் சாதன பழுதுகளை சரிசெய்வது உள்ளிட்ட பணிகள் தாமதமாகின்றன.

காலியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை:

இதனால், காலியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு, வாரியத்திற்கு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர். இதுகுறித்து, தொழிற்சங்கத்தினர் கூறுகையில், ‘காலியிடங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒப்பந்த ஊழியர்களை நியமிக்காமல், நிரந்தர ஊழியர்களை உடனே நியமிக்க வேண்டும். முதல் கட்டமாக, 5,000 ஊழியர்களை நியமிக்க, அரசு ஒப்புதல் தர வேண்டும்’ என்றனர்.

10260 காலிப்பணியிடங்கள்:

உயர் நீதிமன்ற உத்தரவின்படி கவனமாகப் பரிசீலித்த அரசு 10, 260 காலிப்பணியிடங்களில் முதல்கட்டமாக மின்னியல் பிரிவில் 200 தொழில்நுட்ப உதவியாளர் பணிகளில் ஆட்களை நியமிக்க 2 நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளிக்கிறது. அதன்படி, இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை டேன்ஜெட்கோ அணுக வேண்டும்.

மனிதவள கொள்கையை வெகு விரைவில் வகுப்பதோடு ஓய்வூதியத்துக்கான நிதியத்தை ஏற்படுத்த வேண்டும். மனிதவளத்தை முறைப்படுத்துவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விரைவில் 10, 260 காலிப்பணியிடங்களை நிரப்பப்படும் என்பது உறுதியாகியுள்ளது.

TANGEDCO அறிவிப்பு எப்போது வெளியாகும்:

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 10260த்திற்கும் மேற்பட்ட உதவி பொறியாளர்கள், ஜூனியர் அசிஸ்டன்ட், கள உதவியாளர்கள் உள்ளிட்ட பணிகள் நிரப்புவதற்கான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.

Whatsapp Join
Whatsapp Channel Join
Telegram Channel Join

 

TN Electricity Board 55000 Job Vacancy Announcement 2023 
TN Electricity Board 55000 Job Vacancy Announcement 2023

Official Website:

Latest Updates:

Leave a Comment

Join Group!
error: Content is protected !!