12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! Tamilnadu 12th Result 2024

Tamilnadu 12th Result 2024

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதி இன்று காலை 9.30 மணிக்கு வெளியாக உள்ளன. இதை அரசு இணையதளம், குறுஞ்செய்தி, ஆட்சியர் அலுவலகங்கள் மூலம் பார்க்கலாம். Result பார்ப்பதற்கான Link கீழே கொடுக்கப்பட்டு உள்ளது. 

Tamilnadu 12th Result 2024
Tamilnadu 12th Result 2024

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 12 ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான 2023-24 ம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி முடிவடைந்தது. இந்தத்தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 7 லட்சத்து 80,000 மாணவர்கள் எழுதியுள்ளனர்.

For More Job Info Join:

Whatsapp Join

 

தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்து 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 6 ந் தேதி காலை 9.30 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை வெளியிடுகிறது.

To Know Government Jobs Details-Click Here

இந்த நிலையில், அரசு தேர்வு துறை இயக்குநர்  வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், பொதுத்தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதி இன்று காலை 9.30 மணி அளவில் பள்ளிக்கல்வித்துறை  வெளியிடுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

12th விடைத்தாள் திருத்தம்:

இந்த நிலையில் 12ஆம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. சம்பந்தப்பட்ட மண்டலங்களுக்கு விடைத்தாள்கள் ஏப்ரல் 1ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 1ஆம் தேதி விடைத்தாள் திருத்தும் பணியை முதுகலை ஆசிரியர்கள் தொடங்கினர். விடைத்தாள் திருத்தும் பணி மும்முரமாக நடைபெற்ற நிலையில், விடைத் தாள்கள் அனைத்தும் திருத்தி முடிக்கப்பட்டன. 

மே 5ஆம் தேதி மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நடைபெற உள்ளது. இதனால் மாணவர்களின் மனநிலை பாதிக்கப்படாமல் இருக்க, நீட் தேர்வு நடைபெற்ற பிறகு 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட வேண்டும் என்று மாணவர்களும் பெற்றோர்களும் ஆசிரியர் சங்கங்களும் கோரிக்கை விடுத்தனர். 

இதற்கு செவிசாய்த்த பள்ளிக் கல்வித்துறை, மே 6ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவித்தது. இதையடுத்து திட்டமிட்டப்படி பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகளை அரசுத் தேர்வுகள் துறை முடுக்கி விட்டுள்ளது. 

12th Result பார்ப்பது எப்படி?

தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளத்தில் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவு செய்து தெரிந்துகொள்ளலாம்.

மாணவர்கள் தேர்வுக்காகப் பதிவு செய்த செல்போன் எண்ணுக்குத் தேர்வு முடிவுகள் எஸ்எம்எஸ் அனுப்பி வைக்கப்படும். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து நூலகங்களிலும் கட்டணம் இன்றி தெரிந்து கொள்ளலாம்.

மேலும், மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய பள்ளிகளில் மதிப்பெண் பட்டியலுடன் கூடிய தேர்வு முடிவுகளையும் அறிந்து கொள்ளலாம்.

Tamilnadu 12th Result 2024
Tamilnadu 12th Result 2024

TN 12th Result Link:

For More Job Info Join:

Whatsapp Join

Leave a Comment

Join Group!
error: Content is protected !!