SSC Job Recruitment 2023
இந்திய அரசு பணியாளர் தேர்வாணையம் என்பது இந்திய அரசுப் பணிக்குத் தேவையானவர்களைத் தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தேர்வு செய்ய ஏற்படுத்தப்பெற்ற ஒரு அரசு சார்ந்த அமைப்பு ஆகும். இது ஒரு தலைவரையும், இரண்டு செயலாளர்களைக் கொண்டு செயல்படுகிறது.

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (SSC) 2023ம் ஆண்டுக்கான தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆள்சேர்க்கை வாயிலாக 1,600 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
For More Job Info Join:
| Join |
இந்த பணியிடங்களை நிரப்ப ஆர்வமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் Exam அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 08.06.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
SSC Job Details:
பதவிகள்:
மத்திய அமைச்சகங்கள், துறைகள், தன்னாட்சி அமைப்புகள், தீர்ப்பாயங்கள் போன்ற பல்வேறு அரசு சார்ந்த நிறுவனங்களில் கீழ்நிலை எழுத்தாளர், இளநிலை செயலக உதவியாளர் (Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant), டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் (Data Entry Operator) போன்ற பதவிகள் நிரப்பப்பட உள்ளன.
காலியிடங்களின் எண்ணிக்கை :
- 1600
Data Entry Operator:
கல்வித் தகுதி :
டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், 12ம் வகுப்பில் கணிதம் உள்ளடங்கிய அறிவியல் பாடங்களை எடுத்து படித்து ( Science stream with Mathematics) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், 01-08-2023 அன்று 18-27க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் :
- ரூ.25,500-81,100
LDC/ JSA and DEO/ DEO:
கல்வித் தகுதி :
கீழ்நிலை எழுத்தாளர், இளநிலை செயலக உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் :
- ரூ. 19,900-63,200
வயது வரம்பு:
இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், 01-08-2023 அன்று 18-27க்குள் இருக்க வேண்டும்.
Age Relaxation:
இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள்.
சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.
தேர்வு செய்யப்படும் முறை :
இந்த பணியிடங்களுக்கு Computer Based Examination (Tier-I & Tier-II), Skill Test தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
How to Apply For SSC Job Recruitment 2023?
- விண்ணப்பதாரர்கள் Onlineல் விண்ணப்பிக்கலாம்
- அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரங்களைக் கண்டறியவும்.
- எந்த தவறும் இல்லாமல் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.
- தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
- ஆன்லைனில் பணம் செலுத்துங்கள்
- உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்
விண்ணப்பக் கட்டணம்:
- ரூ. 100/-
விண்ணப்பிக்க கடைசி தேதி :
- 08.06.2023
Job Apply:
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் https://ssc.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

Notification:
Official Website:
Latest Jobs:
For More Job Info Join:
| Join |





