கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 ஒவ்வொரு மாதமும் எந்த தேதியில் கிடைக்கும்! Kalaignar Magalir Urimai Thogai Every Month Credit Date 2023

Kalaignar Magalir Urimai Thogai Every Month Credit Date 2023

தமிழகம் முழுக்க குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகையாக வழங்கிட தமிழக அரசால் ‘கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தில் மாநிலம் முழுக்க இரண்டு கட்டங்களாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதுதவிர சிறப்பு முகாம் வழியாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டன.

Kalaignar Magalir Urimai Thogai Every Month Credit Date 2023
Kalaignar Magalir Urimai Thogai Every Month Credit Date 2023

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அரசிடம் உள்ள தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டும், அரசு அலுவலர்களால் நேரடி கள ஆய்வுகளின் மூலம் சரிபார்க்கப்பட்டும், திட்ட விதிமுறைகளைப் பூர்த்தி செய்த 1.065 கோடி மகளிர் இந்த திட்டத்தில் பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை:

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வருகிற 15-ந்தேதி தொடங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்காக 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகள் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களின் வங்கி கணக்குகளை சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை உள்பட பல மாவட்டங்களில் விண்ணப்பதாரர்களின் வங்கிக் கணக்குகளுக்கு கடந்த இரு தினங்களாக ஒரு ரூபாய் அனுப்பி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

ஒரு ரூபாய் அனுப்பியவுடன் விண்ணப்பதாரர்களின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி வழியாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. தவறான வங்கிக் கணக்குகளுக்கு உரிமைத் தொகை சென்று விடக்கூடாது என்ற எண்ணத்தில் சோதனை அடிப்படையில் ஒரு ரூபாய் னுப்பி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில், அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை முதமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில், பயனாளிகளுக்கு உரிமைத் தொகைக்கான ஏடிஎம் அட்டைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார் .

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 ஒவ்வொரு மாதமும் எந்த தேதியில் கிடைக்கும்!

உரிமை தொகை பெற்ற பெண்கள் தேவையான பொருட்களை வாங்க உதவிகரமாக இருக்கும் என்று நெகிழ்ச்சி தெரிவித்தனர். இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கோடியே 6 லட்சத்து ஐம்பதாயிரம் மகளிர்க்கும் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது.

இனி வரக்கூடிய ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிர்களுக்கு வங்கிக் கணக்கில் ரூபாய் ஆயிரம் செலுத்தப்படும்.

Kalaignar Magalir Urimai Thogai Every Month Credit Date 2023
Kalaignar Magalir Urimai Thogai Every Month Credit Date 2023

Latest Updates:

For More Job Info Join:

Whatsapp Join

Leave a Comment

Join Group!
error: Content is protected !!