பெண்கள் இன்ஜினியரிங் மற்றும் டிப்ளமோ படித்தால் வருடத்திற்கு  ரூபாய் 50000 உதவித்தொகை! Girls Education Rs 50000 Pragati scholarship 

 Girls Education Rs 50000 Pragati scholarship 

 

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (AICTE) இன்ஜினியரிங் மற்றும் டிப்ளமோ படிக்கும் பெண்களுக்காக வருடத்திற்கு ரூ. 50000 உதவித்தொகையாக வழங்குகிறது. பிரகதி ஸ்காலர்ஷிப் பற்றிய முழுத் தகவல்களை இப்போது பார்ப்போம்.

 Girls Education Rs 50000 Pragati scholarship 
Girls Education Rs 50000 Pragati scholarship

பிரகதி ஸ்காலர்ஷிப்(Pragati Scholarship):

இந்தியாவில் உள்ள தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களை அங்கீகரிக்கும் நோடல் ஏஜென்சியான அகில இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் இன்ஜினியரிங் மற்றும் டிப்ளமோ படிக்கும் பெண்களுக்கு என பிரத்யேகமாக பிரகதி என்ற ஸ்காலர்ஷிப்பை வழங்கி வருகிறது. 

To Know Government Jobs Details-Click Here

அதில், இந்த கல்வி உதவித்தொகை பெண்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. அதுவும் இன்ஜினியரிங் மற்றும் டிப்ளமோ படிக்கும் பெண்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் 5000 மாணவிகளுக்கு வழங்கப்படும். இதில் தமிழகத்தில் மட்டும் 800 இன்ஜினியரிங் படிக்கும் மாணவிகளுக்கும், 700 டிப்ளமோ படிக்கும் மாணவிகளுக்கும் என மொத்தம் 1500 மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது.

பிரகதி ஸ்காலர்ஷிப் யாருக்கு கிடைக்கும்:

ஒரு மாணவிக்கு வருடத்திற்கு ரூ. 50000 உதவித்தொகையாக வழங்கப்படும். இது நேரடியாக மாணவிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் இந்த உதவித் தொகையை பெறத் தகுதி உடையவர்கள். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இன்ஜினியரிங் படிப்பவர்களுக்கு 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலும், டிப்ளமோ படிப்பவர்களுக்கு 10 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலும் தகுதி பட்டியல் தயார் செய்யப்பட்டு முதல் வருடத்தில் ஸ்காலர்ஷிப் வழங்கப்படும். அடுத்தடுத்த வருடங்களில் முந்தைய ஆண்டு தேர்ச்சி அடிப்படையில் ஸ்காலர்ஷிப் வழங்கப்படும். அரியர் வைத்தவர்களுக்கு ஸ்காலர்ஷிப் கிடைக்காது. இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க www.scholarships.gov.in என்ற இணையதளப் பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

பிரகதி ஸ்காலர்ஷிப் (Pragati Scholarship) இட ஒதுக்கீடு:

உதவித் தொகையை வழங்குவதில் எஸ்சி மாணவிகளுக்கு 15 சதவீதம் இட ஒதுக்கீடும், எஸ்டி மாணவிகளுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடும், ஓபிசி மாணவிகளுக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடும் பின்பற்றப்படும்.

பிரகதி ஸ்காலர்ஷிப் விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்:

  • பத்தாம் வகுப்பு, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள்
  • மாணவியின் ஆதார் எண்
  • வருமானச் சான்றிதழ்
  • கல்விக் கட்டண நகல்
  • சாதிச் சான்றிதழ்
  • கல்லூரி தலைவரிடம் இருந்து சான்றிதழ்
 Girls Education Rs 50000 Pragati scholarship 
Girls Education Rs 50000 Pragati scholarship

Pragati Scholarship Details:

Pragati Scholarship Apply Link:

Latest Jobs:

For More Job Info Join:

Whatsapp Join

Leave a Comment

Join Group!
error: Content is protected !!