Diwali Festival Continuous Holidays Announced 2023
இந்த ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி 2023 தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக் கிழமை வருகிறது. மறுநாள் திங்கள் கிழமை வேலைநாளாக இருந்த நிலையில் வெளியூர் சென்று திரும்பும் மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் அதிருப்தி அடைந்தனர்.

திங்கள் கிழமை விடுமுறை:
தீபாவளி அன்றே கிளம்பினால் தான் சென்னை உள்ளிட்ட பிற நகரங்களுக்கு திரும்ப முடியும் என்ற நிலை ஏற்பட்டது. எனவே தமிழக அரசு திங்கள் கிழமையும் விடுமுறை அறிவித்தால் சனி, ஞாயிறு, திங்கள் என மூன்று நாள்கள் விடுமுறை நாள்களாக அமையும். திங்கள் கிழமை விடுமுறைக்கு பதிலாக வேறொரு சனிக் கிழமை வேலைநாளாக அறிவிக்கலாம் என்று கூறப்பட்டது.
கோரிக்கை:
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கமும் இன்று தமிழக அரசுக்கு இது தொடர்பாக கோரிக்கை வைத்தது. பல தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வந்ததை தொடர்ந்து தமிழக அரசும் விடுமுறை அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தி வந்தது.
13.11.2023 திங்கள் கிழமை அன்று விடுமுறை:
அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 13.11.2023 திங்கள் கிழமை அன்று விடுமுறை நாளாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
விடுமுறை ஈடு செய்ய:
தமிழக அரசு அறிவிப்பில், “இவ்வாண்டு தீபாவளியை 12.11.2023 அன்று கொண்டாடும் பொருட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 13.11.2023 அன்று ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
13.11.2023 அன்று விடுமுறை ஈடு செய்யும் வகையில் 18.11.2023 அன்று பணி நாளாக அறிவித்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.
Latest Jobs: