Chennai High Court Job 2025
Chennai High Court Job: சென்னை உயர் நீதிமன்றத்தில் வி.சி ஹோஸ்ட் டெக்னிக்கல் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 75 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 23.12.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
VC Host (Technical)
காலியிடங்களின் எண்ணிக்கை: 75
கல்வித் தகுதி: B.Sc (Computer Science) / B.Sc (IT) / BCA / B.E. (Computer Science, Software Engineering, AI and Machine Learning) /B.Tech (IT) / MCA / M.Sc (Computer Science) / M.E (Computer Science, Software Engineering, AI and Machine Learning) / M.Tech (IT) / M.S (IT) படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 22.11.2024 அன்று 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 30,000
தேர்வு செய்யப்படும் முறை:
இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு 120 மதிப்பெண்களுக்கு நடைபெறும். கணினி சார்ந்து 50 வினாக்களும், பொது அறிவில் 10 வினாக்களும் கேட்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
சென்னை உயர் நீதிமன்றத்தில் வி.சி ஹோஸ்ட் டெக்னிக்கல் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் Online மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் Offlineல் விண்ணப்பிக்கலாம்.
- அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரங்களைக் கண்டறியவும்.
- எந்த தவறும் இல்லாமல் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.
- தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
- உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
விண்ணப்ப கட்டணம்:
- சென்னை உயர் நீதிமன்றத்தில் வி.சி ஹோஸ்ட் டெக்னிக்கல் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் ரூபாய் 600.
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய இணையதளப் பக்க தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.