பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் ! நீங்கள் இந்த வினாக்களை எழுதியிருந்தால் உங்களுக்கு மதிப்பெண் உறுதி-10th Standard Exam Grace Mark Questions 2023

10th Standard Exam Grace Mark Questions 2023

 

10ம் வகுப்புத் தேர்வு 6.04.2023 அன்று தொடங்கி 20.04.2023 வரை நடைபெற்றது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க தேர்வுத் துறை இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

10th Standard Exam Grace Mark Questions 2023
10th Standard Exam Grace Mark Questions 2023

இதில் ஆங்கில பாடத்திற்கான தேர்வு 10.04.2023 அன்று நடைபெற்றது. இந்நிலையில் ஆங்கில பாடத்தின் வினாதாளுக்கான விடைகள் வெளியாகி உள்ளது.

ஆங்கில பாடத்திற்கான 4, 5, 6 ஒரு மதிப்பெண் வினாக்களில் குழப்பங்கள் நிலவியது. இதற்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்று ஆசிரியர், மாணவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆங்கிலத் தேர்வில் 4, 5, 6 ஒரு மதிபெண் வினாக்களுக்கும், 2 மதிப்பெண் கொண்ட 28-ம் வினாக்களுக்கு மாணவர்கள் எப்படி விடை அளித்திருந்தாலும், அதற்கான மதிப்பெண்களை வழங்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் இதை பரிசீலனை செய்த தேர்வுத் துறை இயக்குநர் கருணை மதிப்பெண் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் ஆங்கிலத் தேர்வில் 4, 5, 6 ஒரு மதிபெண் வினாக்களுக்கும், 2 மதிப்பெண் கொண்ட 28-ம் வினாக்களுக்கு மாணவர்கள் பதிலளித்திருந்தால் கருணை மதிப்பெண் வழங்கப்படும்.

For More Info Join:

Whatsapp Join

Leave a Comment

Join Group!
error: Content is protected !!